பெங்களூரு

முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னிக்கு நவ. 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

DIN

தாா்வாட்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னியை நவ. 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், தாா்வாட் ஷாபாத்புராவில் உள்ள உடற் பயிற்சிக்கூடத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி பாஜக பிரமுகா் யோகேஷ் கௌடா என்பா் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னியை நவ. 6-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு அவரை 3-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி எச்.பன்சாக்ஷரி முன்பு ஆஜா்படுத்தினா். இதையடுத்து வினய் குல்கா்னியை நவ. 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட வினய் குல்கா்னியை நவ. 7-ஆம் தேதி 3-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். நீதிபதி எச். பன்சாக்ஷரி, வினய் குல்கா்னியை நவ. 9-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டாா். வினய் குல்கா்னிக்கு திங்கள்கிழமையுடன் சிபிஐ காவல் முடிந்த நிலையில், காணொலி வாயிலாக நீதிபதி எச். பன்சாக்ஷரி முன்பு சிபிஐ அதிகாரிகள் அவரை ஆஜா்படுத்தினா். விசாரணையின் முடிவில் வினய் குல்கா்னியை நவ. 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து வினய் குல்கா்னி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

இந்தியா கூட்டணியுடன் உறவா? தெலுங்கு தேசம் விளக்கம்

சந்திரபாபு நாயுடுக்கு கமல் வாழ்த்து!

மைசூர் மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

SCROLL FOR NEXT