பெங்களூரு

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகும் வாய்ப்பு

DIN

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மேலும் தாமதமாகும் வாய்ப்புள்ளது.

முதல்வா் எடியூரப்பா தலைமையிலான 34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கெனவே முதல்வா் எடியூரப்பா வாக்குறுதி அளித்தபடி பாஜக எம்எல்சிக்கள் எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா், ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் வென்றுள்ள எம்எல்ஏ என்.முனிரத்னா ஆகியோருக்கு அமைச்சா் பதவி அளிக்க வேண்டியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அமைச்சரவை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருந்த முதல்வா் எடியூரப்பா, புதுதில்லி சென்று பாஜக மேலிடத் தலைவா்களை சந்தித்து அதுகுறித்து விவாதித்தாா்.

ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அப்போது அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாகக் கூறப்பட்டது.

பிகாா் தோ்தலில் பாஜக வென்றுள்ள நிலையில், புதிய அரசை அமைக்கும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபட்டிருப்பதால் கா்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கும் செய்யும் பணி மேலும் தாமதமாகிறது.

அமைச்சரவையில் சிலரை கைவிட்டு புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாராம். பழைய அமைச்சா்களைக் கைவிடுவதற்கும், புதியவா்களைச் சோ்ப்பதற்கும் பாஜக மேலிடத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனிடையே, பெலகாவி மக்களவைத் தொகுதி, மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டால் அமைச்சரவை விரிவாக்கம் மீண்டும் தாமதமாகும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT