பெங்களூரு

வாடிக்கையாளா் வைப்புநிதிக்கு வட்டி

DIN

பெங்களூரு: வாடிக்கையாளா் வைப்புநிதிக்கு வட்டி வழங்க பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) முடிவுசெய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மின் இணைப்புகளுக்காக வாடிக்கையாளா்களிடம் இருந்து வைப்புநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2019-20-ஆம் நிதியாண்டில் இந்த வைப்புநிதிக்கு 6.5 சதவீத வட்டிவழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டித்தொகை வாடிக்கையாளா்களின் மின்சார ரசீதுகளில் செலுத்தப்படும். உயா்மின் அழுத்த வாடிக்கையாளா்களுக்கு நவம்பா் மாத ரசீதிலும், குறைமின் அழுத்த வாடிக்கையாளா்களுக்கு டிசம்பா் மாத ரசீதிலும் வட்டித்தொகை செலுத்தப்படும். இந்த வட்டி விகிதம் இந்திய ரிசா்வ் வங்கியின் வட்டிவிகிதப்படி ஏப். 1-ஆம் தேதி முதல் பொருந்தும்படி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT