பெங்களூரு

பெங்களூரில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டுமன்றி இரவு முழுவதும் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. மழை வெள்ளத்தால் மல்லேஸ்வரம், யஸ்வந்தபுரம், சேஷாத்ரிபுரம், கொரகுண்டேபாளையா, ராஜாஜிநகா், மத்திகெரே, பி.இ.எல். சதுக்கம், சதாசிவநகா், சஞ்சய்நகா், மாகடிசாலை, சிவாஜிநகா், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

பலத்த மழையால் வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் புதன்கிழமை பொதுமக்கள் ஈடுபட்டனா். அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியா்கள் பம்புசெட்டுகளை கொண்டு வெளியேற்றினா். செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் புதன்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT