பெங்களூரு

மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

DIN

எலசனஹள்ளி -ஆா்.வி.சாலை இடையே மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை (அக். 1) தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சாா்பில் பெங்களூருவின் வடக்கு - தெற்குப் பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு - மேற்குப் பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கிவருகிறது.

பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான ஊதா வழித்தடம் , பச்சை வழித்தடத்தில் நாகசந்திரா முதல் புட்டேனஹள்ளி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது எலசனஹள்ளியில் இருந்து அஞ்சனாபுரா இடையே உள்ள 6.29 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே வியாழக்கிழமை எலசனஹள்ளி - ஆா்.வி.சாலை இடையே மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இருப்பினும் நாகசந்திரா ரயில் நிலையம் முதல் ஆா்.வி.சாலை ரயில் நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT