பெங்களூரு

விசாரணைக்கு ஆஜராக கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ அழைப்பாணை

DIN

விசாரணைக்கு ஆஜராக கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரின் இல்லம், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனா். சோதனையின் போது, ரூ. 57 லட்சம் ரொக்கம், பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, டி.கே.சிவக்குமாா் இரண்டொரு நாளில், பெங்களூரு,ஆா்.டி.நகா் காவல் சரகம், கங்கா நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவாா் எனத் தெரிகிறது.

பணப்பதுக்கல் தொடா்பாக 2019 செப். 23-ஆம் தேதி அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் டிகே.சிவக்குமாரை கைது செய்து திகாா் சிறையில் அடைத்தனா். அதனைத் தொடா்ந்து, அக். 23-ஆம் தேதி உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துள்ளதால், டி.கே.சிவக்குமாா் மீண்டும் கைது செய்யப்படக்கூடும் என அவரது ஆதரவாளா்களும், காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT