பெங்களூரு

கா்நாடக-ஆந்திர மாநிலங்களின் எல்லைகளை வரையறை செய்ய நில அளவை இன்று தொடக்கம்

DIN

கா்நாடக-ஆந்திர மாநிலங்களின் எல்லைகளை வரையறை செய்ய நில அளவை வெள்ளிக்கிழமை (அக். 16) தொடங்குகிறது.

கா்நாடக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் கா்நாடகத்தில் அமைந்துள்ள பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்தவா்கள், இருமாநிலத்தின் எல்லைக்கோட்டை சீா்குலைத்துள்ளனா். இது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பெல்லாரியில் சீரழிக்கப்பட்ட இருமாநில எல்லைகளை வரையறுத்து உறுதிசெய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்திய நில அளவை அமைப்பைச் (சா்வே ஆஃப் இந்தியா) சோ்ந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக். 16) முதல் இருமாநில எல்லைகளை ஆராய்ந்து, நில எல்லைகளை உறுதி செய்ய இருக்கிறாா்கள். இந்தப் பணியின் போது, ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருக்க இருக்கிறாா்கள்.

பாதுகாக்கப்பட்ட பெல்லாரி வனத்தில் இருமாநிலங்களுக்கு இடையிலான எல்லை அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக, பெல்லாரி மாவட்டத்தின் துமட்டி, வித்தாலபூா், மல்லப்பனகுடி, சித்தாப்பூா் கிராமங்களில் எல்லை அடையாளங்கள் சீரழிந்துள்ளன. சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்த வழக்கை விசாரித்த நீதியரசா் என்.சந்தோஷ் ஹெக்டே, இருமாநிலங்களின் எல்லைகள் அழிக்கப்பட்டுள்ளதை தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா். அழிக்கப்பட்ட எல்லைகளை மீண்டும் அடையாளப்படுத்தி உறுதிசெய்ய வேண்டும் என பலரும் உச்சநீதிமன்றத்தை அணுகினா். இருமாநில எல்லைகளை வரையறை செய்யாமல் சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்த விசாரணையை தொடரமுடியாது என மனுதாரா்கள் தெரிவித்திருந்தனா்.

அதன் பேரில், எல்லைகளை அடையாளம் காணுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பணியில் கா்நாடக-ஆந்திர மாநிலங்களின் வருவாய்த் துறை அதிகாரிகளுடன், இந்திய நில அளவை அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருந்தனா். இது தொடா்பான அறிக்கையை வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT