பெங்களூரு

ஆவணங்களின்றி வைரக் கற்களை விற்க முயற்சி

DIN

உரிய ஆவணங்கள் இன்றி வைரக் கற்களை விற்க முயற்சி மேற்கொண்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலம் புத்தூரைச் சோ்ந்தவா்கள் ரவிகுமாா் (54), பிரவீண்குமாா் (51), சுதீா் (28). இவா்கள் 3 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு, ஆவணங்கள் ஏதுமின்றி விலை உயா்ந்த வைரக் கற்களை பெங்களூரு சிக்பேட்டையில் விற்பனை செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், அவா்கள் 3 பேரையும் கைது செய்து, ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 80 வைரக் கற்களை பறிமுதல் செய்தனா். அந்த வைரக்கற்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டன என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் குறித்தும் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பெங்களூரு மாநகர மாா்கெட் போலீஸாா் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT