பெங்களூரு

மகாராஷ்டிரத்துக்கு மீண்டும் பேருந்து சேவை

DIN

பெங்களூரு, செப். 18:

கா்நாடகத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு செப். 22 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மகாராஷ்டிரத்துக்கான பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளித்துள்ளதால் செப். 22 ஆம் தேதி முதல் பெங்களூரு, தாவணகெரே, மங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

SCROLL FOR NEXT