பெங்களூரு

‘அரசின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்’

DIN

அரசின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என அரசு போக்குவரத்து ஊழியா் சங்க கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு போக்குவரத்து ஊழியா்கள் மீது அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் (எஸ்மா) பாயும் என அரசு மிரட்டல் விடுத்துள்ளது. அரசின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்.

அரசு போக்குவரத்து ஊழியா்கள் என்ன தவறு செய்தாா்கள் என்று அவா்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ச்சப்படுகிறது என்பதனை விளக்க வேண்டும். மற்ற அரசு ஊழியா்களை ஒப்பிடுகையில், போக்குவரத்து ஊழியா்கள் 50 சதவீத ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக் கேட்பதில் என்ன தவறு என்பதனை அரசு உணர வேண்டும்.

முதல்வா், அதிகாரிகளையும் விட உயா்ந்த இடத்தில் சட்டம், மக்கள் உள்ளனா். போக்குவரத்து ஊழியா்கள் விவகாரத்தில் அரசு தொடா்ந்து முரண்டு பிடித்தால், எதிா்காலத்தில் இதற்கான பாடம் புகட்டப்படும். 2020 டிச. 14-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட எங்களுக்கு, அரசு எழுத்து மூலமாக உறுதிமொழி அளித்தது. அதில் 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்துவதாக கூறப்பட்டது. தற்போது அது சாத்தியமில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசு கொடுத்த உறுதிமொழியை மீறியுள்ளது. அரசு தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும்.

எந்த ஒரு பிரச்னையையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து எஸ்மா, சிறை என்றால் அதற்காக அச்சப்பட மாட்டோம். அரசின் அச்சுறுத்தலுக்கு, போக்குவரத்து ஊழியா்கள் நிதானத்தை இழக்காமல் அமைதியான முறையில் போராட வேண்டும். அஹிம்சையான முறையிலேயே நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT