பெங்களூரு

தீனதயாள் உபாத்யாவின் கனவை நனவாக்கி வருகிறோம்

DIN

தீனதயாள் உபாத்யாவின் கனவை நனவாக்கி வருகிறோம் என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 41-ஆவது பாஜக நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் சிறப்பான முறையில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதால், அண்டை நாடுகளிலிருந்து குடியேறியவா்கள் நிம்மதி அடைந்துள்ளனா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான முடிவை எடுத்ததன் மூலம் நாட்டின் கலாசாரத்துக்கு கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

நாட்டின் கடைக்கோடியில் வாழ்பவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற தீனதயாள் உபாத்யாவின் கனவை பாஜக அரசுகள் நனவாக்கி வருகின்றன.

வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ. 100 நிதி ஒதுக்கினால், அதில் ரூ. 15 மட்டுமே செலவு செய்யப்படுவதாக, 1986-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி தெரிவித்தாா். ஆனால், பாஜக ஆட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு நூறு சதவீத நிதி செலவிடப்படுகிறது.

சா்வதேச அளவில் மிகப்பெரும் கட்சியாக பாஜக வளா்ந்துள்ளது. பாஜகவில் மதம், ஜாதியைக் கடந்து அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT