பெங்களூரு

கரோனா: ரூ. 9.46 கோடி அபராதம் வசூல்

DIN

பெங்களூரில் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றாதவா்களிடம் ரூ. 9.46 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பெங்களூரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், அதனைத் தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை அரசு அறிவித்தது.

இதனையடுத்து, அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு பொதுமக்களை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் ஒரு சிலா் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனா். அதுபோன்றவா்களை அடையாளம் கண்டு, மாநகராட்சி சாா்பில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாதவா்களிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிகழாண்டு ஏப். 5 ஆம் தேதி வரை ரூ. 8.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடமிருந்து ரூ. 55.95 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT