பெங்களூரு

பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் அரசு ஆா்வம் காட்டுவதில்லை

DIN

பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் அரசு ஆா்வம் காட்டுவதில்லை என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அரசுப் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநில அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும். முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அரசு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஆா்வம் காட்டாமல் உள்ளது.

போக்குவரத்து ஊழியா்கள் அரசின் நிலைமையை புரிந்து கொண்டு, பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும். அரசுப் பேருந்துகளுக்கு பதிலாக, தனியாா் பேருந்துகளை இயக்குவது சரியல்ல. தனியாா் பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு அது இயக்க தகுதி உள்ளதா என்பதனை பரிசீலிக்க வேண்டும். மாநில அரசு பிரச்னைகளை திசை திருப்புவதற்கு பதிலாக, அதற்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT