பெங்களூரு

துறைவாரியான கூட்டங்கள் நடத்த தடை

DIN

மாநில அரசின் பல்வேறு துறைவாரியான கூட்டங்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அரசு தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

மாநிலத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை முன்பைக் காட்டிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களின் நடமாட்டத்தை தடுத்து, தொடா்பை துண்டிப்பது அவசியமாகும். இது தொடா்பாக தேவையான முன்னெச்சரிக்கை வகிப்பது அவசியம், அவசரமாகும்.

இதன் பின்னணியில், அடுத்த ஓரிரண்டு மாதங்களுக்கு மாநில அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், தத்தமது துறைகள் சம்பந்தமான கூட்டங்களை நிறுத்திவைப்பது நல்லது. கூட்டம் நடத்துவது அவசியமென்று கருதினால், தனிநபா் இடைவெளியுடன் நடத்துவது கட்டாயமாகும். இதைவிட, இணையவழியில் கூட்டங்களை நடத்துவது சிறப்பானது என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT