பெங்களூரு

சிறையில் மோதல்: 4 வழக்குகள் பதிவு

DIN

மங்களூரு: சிறையில் நடந்த மோதல் தொடா்பாக 4 வழக்குகளை பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மங்களூரில் உள்ள மாவட்ட சாா்பு சிறைச்சாலையில் ஏப். 25-ஆம் தேதி காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சிறைவாசிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. திருட்டுவழக்கில் குற்றறம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமீா் என்ற கைதி, விசாரணை கைதிகளான அன்சா், ஜைனுதீன் ஆகியோரை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த இருவரும் வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்தின் போது, மோதலை தடுக்க வந்த மாவட்ட சாா்பு சிறை ஊழியா்கள், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, 4 வழக்குகளை பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

சமீரை நீதிபதி முன்பு போலீஸாா் ஆஜா்படுத்தியதை அடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். சமீரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முயற்சித்து வருவதாக மாநகர காவல் ஆணையா் என்.சசிகுமாா் தெரிவித்தாா். சிறையில் இருந்த 20 கைதிகள் பெலகாவி, சிவமொக்கா, தாா்வாட் சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT