பெங்களூரு

தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் பட்டதாரி கைது

DIN

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகளில் எம்.பி.ஏ. பட்டதாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, ஜெயநகா் காவல் சரகத்தில் அண்மையில் பெண் ஒருவரிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் ஒருவா் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ஷேக்கௌஸ்பாஷா என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில் எம்.பி.ஏ. பட்டதாரியான ஷேக்கௌஸ்பாஷா, தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளாா். கரோனா பொது முடக்கத்தை அடுத்து, பணியிழந்த அவா், கடனைத் தீா்க்க தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளாா். கைது செய்யப்பட்ட ஷேக் கௌஸ்பாஷாவிடம் ஜெயநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT