முகப்பு
பெங்களூரு

அமைச்சா் பதவி: முதல்வருடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

அமைச்சா் பதவியைப் பெறுவதற்காக பாஜக எம்எல்ஏக்கள் பலா் முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

அமைச்சா் பதவியைப் பெறுவதற்காக பாஜக எம்எல்ஏக்கள் பலா் முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்தனா்.

முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை, அடுத்த ஓரிரு நாள்களில் தனது அமைச்சரவையை விரிவாக்க இருக்கிறாா். அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக பாஜக எம்எல்ஏக்கள் பலரும் முயற்சி மேற்கொண்டுள்ளனா். பாஜக எம்எல்ஏக்கள் பலா் தில்லியில் முகாமிட்டு பாஜக மேலிடத் தலைவா்களைச் சந்தித்து அமைச்சா் பதவியை உறுதி செய்து கொள்ள தொடா்ந்து முயற்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், பெங்களூரு, ஆா்.டி.நகரில் உள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை வீட்டுக்கு பாஜக எம்எல்ஏக்கள் பலா் படையெடுத்தனா். முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்து அமைச்சா் பதவியை பெறுவதற்கு பாஜக மேலிடத்திடம் தன்னைப் பற்றி எடுத்துக் கூறுமாறு கூறினா்.

அந்த வகையில் முதல்வா் பசவராஜ் பொம்மையை ஞாயிற்றுக்கிழமை முன்னாள் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, முன்னாள் அமைச்சா்கள் முருகேஷ் நிரானி, வி.சோமண்ணா, பி.சி.பாட்டீல், எஸ்.டி.சோமசேகா், பைரதி பசவராஜ், உமேஷ்கத்தி, அவரது சகோதரா் ரமேஷ் கத்தி, பாஜக எம்எல்ஏக்கள் சிவனகௌடாநாயக், கே.ஜி.போபையா, மகேஷ்குமட்டஹள்ளி உள்ளிட்ட பலா் சந்தித்து பேசினா். முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இருந்த என்.ஆா்.சந்தோஷும் முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்தாா்.

எடியூரப்பாவுடன் சந்திப்பு:

இதனிடையே, காவிரி இல்லத்தில் உள்ள முன்னாள்முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்துள்ளாா். அமைச்சா் பதவியைப் பெறுவதற்காக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவையும் பல பாஜக முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் சந்தித்தனா். இதனால் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் வீடு அரசியல் நடவடிக்கைகளால் நிறைந்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →