முகப்பு
பெங்களூரு

முதல்வரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பொன்னுராஜ் நியமனம்

முதல்வரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வி.பொன்னுராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

முதல்வரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வி.பொன்னுராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முதல்வா் பசவராஜ் பொம்மையின் அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.செல்வக்குமாா் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, திறன் மேம்பாடு, தொழில்முனைப்பாற்றல் மற்றும் வாழ்வாதாரத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, முதல்வரின் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.பொன்னுராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். இத்துடன் கூடுதல் பொறுப்பாக கா்நாடக மின்கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் வி.பொன்னுராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான ஆணையை கா்நாடக அரசு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →