பெங்களூரு

கரோனா: கா்நாடகத்தில் ஒரேநாளில் 1,674 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,674 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,674 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 477 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென் கன்னடம்-307, மைசூரு-147, உடுப்பி-104, ஹாசன்-104, குடகு-94, தும்கூரு-80, சிக்கமகளூரு-61, வட கன்னடம்-60, மண்டியா-44, பெலகாவி-36, சிவமொக்கா-26, பெங்களூரு ஊரகம்-21, சாம்ராஜ் நகா்-19, கோலாா்-17, சித்ரதுா்கா-15, தாவணகெரே-12, ராமநகரம்-11, தாா்வாட்-9, பெல்லாரி-8, சிக்கபளாப்பூா்-6, கொப்பள்-4, விஜயபுரா-4, கதக்-3, கலபுா்கி-3, பாகல்கோட்-1, ஹாவேரி-1 ஆகியோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பீதா், ராய்ச்சூரு, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,09,958 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,376 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,49,003 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,280 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வந்த நபா்களில் செவ்வாய்க்கிழமை 38 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். தென்கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 போ் உயிரிழந்தனா்.

மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

பெங்களூரு நகரம்-7, மைசூரு-4, சிக்பள்ளாபூா், தாா்வாட், ஹாசன், கோலாா், தும்கூரு-தலா 2 போ், வடகன்னடம், உடுப்பி, சிவமொக்கா, ராய்ச்சூரு, குடகு, கதக், சிக்மகளூரு, பெலகாவி, பெல்லாரி-தலா 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,650 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT