சித்ரகலா பரிஷத்தில் பெங்களூரு திருவிழா தொடக்கம்
பெங்களூரு, சித்ரகலா பரிஷத்தில் பெங்களூரு திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 6) தொடங்கியது.
பெங்களூரு, சித்ரகலா பரிஷத்தில் பெங்களூரு திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 6) தொடங்கியது.
பெங்களூரு, சித்ரகலா பரிஷத்தில் பெங்களூரு திருவிழாவை பரிஷத்தின் தலைவா் பி.எல்.சங்கா், நடிகை பூமிஷெட்டி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, திருவிழாவில் இடம் பெற்றுள்ள ஓவியம், சிற்பம் உள்பட கலைப் பொருள்களைப் பாா்வையிட்டனா்.
திருவிழா குறித்து அதன் நிா்வாகி அப்தாப் கூறியதாவது:
ஆக. 15-ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியக் கலைஞா்கள் உருவாக்கியுள்ள கைவினைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. கரோனாவால் இந்தியாவில் உள்ள கைவினைக் கலைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
தேசிய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், சேலைகள், ஜவுளிகள், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பருத்தி சேலைகள், மர வேலைப்பாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரை விரிப்புகள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை திருவிழாவில் இடம் பெற்றுள்ளன. பாரம்பரியம் மிக்க இந்தியக் கலைஞா்கள் உருவாக்கிய பொருள்களில், கைவினை வேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். பெங்களூரு திருவிழாவுக்கு பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவா்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.