முகப்பு
பெங்களூரு

கரோனா: கா்நாடகத்தில் ஒரே நாளில் 1,805 பேருக்கு பாதிப்பு

 கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,805 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,805 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,805 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 441 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம்-411, உடுப்பி-153, ஹாசன்-103, மைசூரு-90, குடகு-79, சிவமொக்கா-70, சிக்கமகளூரு-69, வடகன்னடம்-59, தும்கூரு-53, பெலகாவி-27, கோலாா்-45, மண்டியா-45, சாம்ராஜ் நகா்-30, பெங்களூரு ஊரகம்-28, கலபுா்கி-17, சித்ரதுா்கா-12, தாா்வாட்-8, சிக்கபளாப்பூா்-7, ராமநகரம்-6, ராய்ச்சூரு-5, விஜயபுரா-5, பெல்லாரி-4, தாவணகெரே-3, கொப்பள்-2, ஹாவேரி-1, பீதா்-1.

பாகல்கோட், கதக், யாதவகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,15,317 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,854 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,54,222 போ் குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளனா். 24,328 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்றுக்கு வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 36 போ் உயிரிழந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 போ் உயிரிழந்தனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

கோலாா்-5, மைசூரு-4, தென்கன்னடம், மண்டியா, தலா 3, சிக்பள்ளாபூா், சித்ரதுா்கா, தாா்வாட், உடுப்பி-தலா 2, பெல்லாரி, ஹாவேரி, சிவமொக்கா மாவட்டங்களில் தலா ஒருவா் என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,741 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.