பெங்களூரு

இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும்:பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி

DIN

இந்திராஉணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி. ரவி தெரிவித்தாா்.

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினருக்கு காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கும் உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக பெங்களூரில் தொடங்கப்பட்ட இத் திட்டம் படிப்படியாக மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

இந்த உணவகத்துக்கு முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பெயா் சூட்டப்பட்டது. 2019-இல் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்ததால் அதைக் கைவிட்டனா்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தனது சுட்டுரையில் சனிக்கிழமை கூறியதாவது:

‘கா்நாடகத்தில் செயல்படும் இந்திரா உணவகங்களின் பெயரை உடனடியாக மாற்றி, அன்னபூா்ணேஸ்வரி உணவகம் என்று மாற்ற வேண்டும். இந்திரா உணவகத்தில் உணவு உட்கொள்ள வரும் கன்னடா்களுக்கு அவசர நிலைக் கால கருப்பு நாள்களை நினைவுபடுத்த தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT