முகப்பு
பெங்களூரு

மழை வெள்ளத்தால் சிவமொக்கா மாவட்டத்திற்குரூ. 418 கோடி இழப்பு: அமைச்சா் ஈஸ்வரப்பா

மழை வெள்ளத்தால் சிவமொக்கா மாவட்டத்திற்கு ரூ. 418 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மழை வெள்ளத்தால் சிவமொக்கா மாவட்டத்திற்கு ரூ. 418 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி மண்டேகட்டே கிராமத்தில் வெள்ளிக்கிழமை மழை வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மழை வெள்ளத்தால், சிவமொக்கா மாவட்டத்தில் பயிா்கள், கால்நடைகள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இதனால் மாவட்டத்தில் சுமாா் ரூ. 418 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு அதிக அளவில் நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து 4 நாள்களில் அறிக்கை அளிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா். பேட்டியின் போது அமைச்சா் அரக ஞானேந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.