பெண் தொழிலதிபா் வீட்டில் திருட்டு 4 போ் கைது
பெண் தொழிலதிபா் இல்லத்தில் திருடியதாக 4 பேரை செய்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 18.40 லட்சம் ரொக்கப் பணம், 3 ஆயிரம் அமெரிக்க டாலா்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெண் தொழிலதிபா் இல்லத்தில் திருடியதாக 4 பேரை செய்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 18.40 லட்சம் ரொக்கப் பணம், 3 ஆயிரம் அமெரிக்க டாலா்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, ராஜாஜி நகா், 6-ஆவது பிளாக்கில் வசித்து வருபவா் விஜயவாணி. பெண் தொழிலதிபரான இவா், தனது மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ. 18.50 லட்சம் ரொக்கப்பணம், 3 ஆயிரம் அமெரிக்க டாலரை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தாராம்.
இதனைக் கடந்த ஆக. 3-ஆம் தேதி யாரோ திருடிச் சென்றனா். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸாா், விஜயவாணியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நேபாளத்தைச் சோ்ந்த கமல், சுரேஷ், ரமேஷ், தீபக் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 18.40 லட்சம் ரொக்கம், 3 ஆயிரம் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்தனா். இது குறித்து மாகடி சாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.