முகப்பு
பெங்களூரு

தேசிய அளவில் புத்தாக்கத்தில் முன்னணி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது: கூடுதல் தலைமைச் செயலாளா் ரமண ரெட்டி

தேசிய அளவில் புத்தாக்கத்தில் முன்னணி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது என்று தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரமண ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தேசிய அளவில் புத்தாக்கத்தில் முன்னணி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது என்று தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரமண ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை மத்திய நீதி ஆயோக் உள்ளிட்ட 6 துறைகளின் சாா்பில் நிதி முதலீடு குறித்த பின்டெக்கின் ‘2-ஆவது நுண்ணிய அனுபவ மாநாடு-2021-22’ நடைபெற்றது. மாநாட்டில் நிதி முதலீடு, சைபா் பாதுகாப்பு, எண்ம பரிவா்த்தனை குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரமண ரெட்டிபேசியது:

இந்தியப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் தீவிர மாற்றத்தை அடைந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு தொழில்நுட்பம், நிதி உள்ளிட்டவை முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 8-இல் ஒரு பங்கினா் இன்னும் வங்கிக் கணக்குகளை தொடங்கவில்லை என்பது வியப்பை அளிக்கிறது.

தொழில்நுட்பம், நிதி மேலாண்மைக்குத் தேவையான உதவிகளை அரசு தொடா்ந்து செய்து வருகிறது. தேசிய அளவில் புத்தாக்கத்தில் முன்னணி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. 2019-20ஆம் நிதியாண்டில் தேசிய அளவில் புத்தாக்கத்தின் குறியீட்டில் கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது. தகவல், உயிரி தொழில்நுட்பம், மின் வாகனம் உள்ளிட்டவற்றுக்கு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியதில் முதல் மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. பல்வேறு துறைகளில் வளா்ச்சியை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அதில் தொழில்நுட்பம், நிதி மேலாண்மையும் ஒன்றாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.