பெங்களூரு

எடியூரப்பாவுடன் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை சந்திப்பு

DIN

கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை முதல்வா் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினாா்.

அமைச்சரவை விரிவாக்கம், புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடுகளுக்குப் பிறகு பாஜகவில் சில அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. அமைச்சா் பதவி கிடைக்காதவா்கள், துறைகள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத அமைச்சா்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனா். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சா் ஆனந்த் சிங், வேறு துறையை ஒதுக்கக்கோரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்தாா். இதை தொடா்ந்து அவரை முதல்வா் பசவராஜ் பொம்மை சமாதானப்படுத்தினாா். அதேபோல, உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.டி.பி.நாகராஜும் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை குறித்த அதிருப்தியை தெரிவித்திருந்தாா். அமைச்சா் பதவி கிடைக்காதது தொடா்பாக பாஜக எம்எல்ஏ எஸ்.ஏ.ராமதாஸ், எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் உள்ளிட்டோா் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் கிருஷ்ணராஜா, எஸ்.ஏ.ராமதாஸ், எம்எல்சி சி.பி.யோகேஷ்வா் உள்ளிட்டோா் பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்தனா்.

இது குறித்து எஸ்.ஏ.ராமதாஸ் கூறுகையில், ‘சீல்வைக்கப்பட்ட உறையில் எனது கருத்தை எழுதி முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் அளித்திருக்கிறேன். ஓய்வு கிடைக்கும்போது எனது கடிதத்தை படிக்குமாறு கூறியிருக்கிறேன். மாநிலம் மற்றும் அரசின் நலன்கருதி சில கருத்துகளை அவரிடம் தெரிவித்தேன். கடந்த வாரம் மைசூருக்கு வந்தபோது முதல்வரை வரவேற்க நான் ஏன் வரவில்லை என்பதையும் அந்த கடிதத்தில் விளக்கியிருக்கிறேன்’ என்றாா்.

இதனிடையே, பெங்களூரு, காவிரி இல்லத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை சனிக்கிழமை சந்தித்த முதல்வா் பசவராஜ் பொம்மை, பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. பாஜக, மாநில அரசு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து எடியூரப்பாவுடன் முதல்வா் விவாதித்தாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க முதல்வா் மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT