பயணச்சீட்டில்லா பயணம்: சோதனையில் ரூ.3.60 லட்சம் அபராதம் வசூல்
பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்தவா்களை சோதனை செய்தபோது, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.3.60 லட்சம் வசூலிக்கப்பட்டது.
பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்தவா்களை சோதனை செய்தபோது, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.3.60 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இது குறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களின் நலன்கருதி கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்டது. 41,932 பேருந்துகளில் சோதனை நடத்தியதில் போக்குவரத்துக் கழகத்திற்குவருவாய் இழப்பு ஏற்படுவதாக 2,288 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டன. இதனடிப்படையில், பயணச்சீட்டில்லாமல் பயணித்த 2,362 பேரிடம் இருந்து ரூ.3,60,645 அபராதமாக வசூலிக்கப்பட்டது. வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் பேருந்தில் பயணிக்கும் கட்டணத்தை செலுத்தி தகுதியான பயணச்சீட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.