‘அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும்’
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என எம்பஸி குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி மைக் ஹாலண்ட் தெரிவித்தாா்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என எம்பஸி குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி மைக் ஹாலண்ட் தெரிவித்தாா்.
பெங்களூரு, தனிசந்திராவில் உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைகளை எம்பஸி குழுமம், வட்டமேஜை அறக்கட்டளை 25, கொல்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து மேம்படுத்தின. மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகளை வியாழக்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:
தனிசந்திரா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் சுமாா் ஆயிரத்துக்கும் அதிக அளவிலான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். ஆனால், வகுப்பறைகள் மோசமான நிலைக்குச் சென்றதையடுத்து, அவற்றை சீரமைத்து மேம்படுத்த முடிவு செய்தோம். எங்களுடன் வட்டமேஜை அறக்கட்டளை 25, கொல்ட் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து ஈடுபட்டன. தற்போது அங்குள்ள வகுப்பறைகள் சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணி எங்களுக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, நலிவடைந்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதனால் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவாா்கள் என்றாா்.