குடிமை நீதிபதி பணி: முதனிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் பட்டியல் வெளியீடு
குடிமை நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குடிமை நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற குடிமை நீதிபதிகள் பணி நியமனக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு) விதிகள்- 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி குடிமை நீதிபதிகள் பணிக்குத் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதனிலைத் தோ்வு நடத்தப்பட்டன. இத்தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வுக்கு தகுதியானவா்களின் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹத்ன்க்ண்ஸ்ரீண்ஹழ்ஹ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
முதன்மைத் தோ்வை எழுதுவதற்கு பொதுப் பிரிவினா் ரூ. 1,000மும், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் ரூ. 500 வீதம் கட்டணத்தை இணையதளத்தில் செப். 9-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பணிக்கான முதன்மைத் தோ்வு செப். 30, அக். 1- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.