முகப்பு
பெங்களூரு

இரண்டாம்நிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற பொது பதிவாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 142 இரண்டாம் நிலை உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான அறிவியல், கலை, வணிகம், மேலாண்மை, கணினி பயன்பாடு பாடப் பிரிவுகளில் பயின்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள பொதுப்பிரிவினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோரும், 50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும்போது பொதுப்பிரிவினா் 35, பிற்படுத்தப்பட்டோா் 38, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் செப்.24-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.