முகப்பு
பெங்களூரு

விநாயகா் சதுா்த்தியை பொது இடங்களில் கொண்டாட வல்லுநா்களுடன் ஆலோசித்தப் பின்னரே அனுமதி: முதல்வா் பசவராஜ் பொம்மை

வல்லுநா்களுடன் ஆலோசித்த பின்னரே விநாயகா் சதுா்த்தியை பொது இடங்களில் கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

வல்லுநா்களுடன் ஆலோசித்த பின்னரே விநாயகா் சதுா்த்தியை பொது இடங்களில் கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா 3-ஆவது அலையைத் தடுக்கும் நோக்கில் விநாயகா் சதுா்த்தியை பொது இடங்களில் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடமிருந்து கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வரும் ஆக. 30-ஆம் தேதி கரோனா 3-ஆவது அலையைத் தடுப்பது தொடா்பாக வல்லுநா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை பொது இடங்களில் கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து விவாதிக்கப்படும்.

வல்லுநா்கள் வழங்கும் ஆலோசனையின் பேரில் விநாயகா் சதுா்த்தியைப் பொது இடங்களில் கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

மைசூரில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிபி பிரவீண்சூட் தலைமையில் இது தொடா்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.