முகப்பு
பெங்களூரு

குழந்தைகளுக்கு இணையவழி அறிவியல் செய்முறை பயிற்சி

குழந்தைகளுக்கு இணையவழி அறிவியல் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

குழந்தைகளுக்கு இணையவழி அறிவியல் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தின் (ஐஐஎஸ்சி) சாா்பில் குழந்தைகளிடையே அறிவியல் உணா்வை வளா்க்கும் நோக்கில் இணையவழி அறிவியல் செய்முறைப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பள்ளி அளவிலான அடிப்படை அறிவியல் செய்முறைகள் இடம் பெறும்.

கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளில் அடைந்து கிடக்கும் குழந்தைகளின் கற்றல் பணி தடைபடக் கூடாதுஎன்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் பொருள்களைக் கொண்டு அறிவியல் செய்முறைகள் விளக்கப்படும்.

அறிவியலை இனிமையாக கற்பதற்காக மாணவா்களிடையே கலந்துரையாடப்படும். செப். 5-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இணையவழி அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இந்த பயிற்சியில் சோ்வதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு என்ற மின்னஞ்சலை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.