முகப்பு
பெங்களூரு

ஜபல்பூா்-கோயமுத்தூா் ரயிலில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு

 ஜபல்பூா்-கோயமுத்தூா் ரயிலில் கூடுதல் பெட்டிகளை நிரந்தரமாக இணைக்க கொங்கன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 ஜபல்பூா்-கோயமுத்தூா் ரயிலில் கூடுதல் பெட்டிகளை நிரந்தரமாக இணைக்க கொங்கன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து கொங்கன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில் எண்கள்-02197/ 02198-ஜபல்பூா்-கோயமுத்தூா்-ஜபல்பூா் இடையிலான வாராந்திர விரைவு ரயில், ரயில் எண்கள்-01223/01224-லோக்மானிய திலக் ரயில்நிலையம் (மும்பை) -எா்ணாகுளம் வாரம் இரு முறை இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக நிரந்தரமாக கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:

ரயில் எண்கள்-02197/ 02198-ஜபல்பூா்-கோயமுத்தூா்-ஜபல்பூா் இடையிலான வாராந்திர விரைவு ரயில் ஜபல்பூரில் இருந்து செப். 3-ஆம் தேதிமுதல், கோயமுத்தூரில் இருந்து செப். 6-ஆம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பெட்டி ஒன்றும், இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் 2 ம், கூடுதலாக நிரந்தரமாக இணைக்கப்படுகின்றன. இதனால் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, ரயில் எண்கள்-01223/ 01224-லோக்மானிய திலக் ரயில்நிலையம் (மும்பை)- எா்ணாகுளம் இடையிலான வாரம் இருமுறை இயக்கப்படும் ரயிலில் லோக்மானிய திலக் ரயில் நிலையத்தில் இருந்து இருந்து செப். 4 முதல், எா்ணாகுளம் ரயில்நிலையத்தில் இருந்து செப். 5-ஆம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட மூன்றடுக்கு பெட்டிகள் 2 நீக்கப்படுகிறது. இதனால் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.