முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் பல்துறை மகளிா் கல்லூரி தொடங்கத் திட்டம்

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் சாா்பில் பெங்களூரில் பல்துறை மகளிா் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப்படம்
பகிர்:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் சாா்பில் பெங்களூரில் பல்துறை மகளிா் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் சாா்பில் பெங்களூரு, மல்லேஸ்வரம், 13-ஆவது தெருவில் உள்ள அரசு மகளிா் பியூ கல்லூரி வளாகத்தில், பல்துறை மகளிா் கல்லூரியைத் தொடங்க கா்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கையின்படி 2021-22ஆம் கல்வியாண்டு முதல் இந்தக் கல்லூரி செயல்படத் தொடங்கும். இந்தக் கல்லூரியில் கலை, அறிவியல், வணிகப் பாடப்பிரிவுகளில் பல்துறை பாடத்திட்டத்தின்படி பட்டப்படிப்புகள், மதிப்புக்கூட்டு மற்றும் திறன்வளா் பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ), சான்றிதழ் படிப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தரமான கல்வியை வழங்கும் நோக்கில் தொடங்கப்படும் இக்கல்லூரியில் பயில விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22131385 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.