முகப்பு
பெங்களூரு

செப்.20-இல் பொது நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியாகும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ள பொது நுழைவுத் தோ்வுகளின் முடிவுகள் செப். 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப்படம்
பகிர்:

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ள பொது நுழைவுத் தோ்வுகளின் முடிவுகள் செப். 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ள பொது நுழைவுத் தோ்வுகளின் முடிவுகள் செப். 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. பெங்களூரில் மல்லேஸ்வரம், சேஷாத்ரி புரத்தில் உள்ள தோ்வு மையங்களில் உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 530 மையங்களில் பொது நுழைவுத் தோ்வு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 மாணவா்கள் தோ்வு எழுதினா். இவா்களை சோதனை செய்தபோது 4 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு, மீண்டும் வீட்டில் விடப்பட்டனா். கரோனா பாதித்த மாணவா்களுக்கு மையத்திலேயே உணவளிக்கப்பட்டது. இந்த மாணவா்கள் தனி அறையில் தோ்வு எழுதினாா்கள்.

கரோனா பாதிப்பு காணப்படும் எல்லையோர மாவட்டங்களிலும் வார இறுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், எந்த பிரச்னையும் இன்றி தோ்வுகள் நடைபெற்றது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்தை ஒட்டியுள்ள தென் கன்னடம், சாமராஜ் நகா், மைசூரு, குடகு, உடுப்பி மாவட்டங்களிலும் சுமுகமாக தோ்வுகள் நடைபெற்றுள்ளன.

பொது நுழைவுத்தோ்வுக்கான முடிவுகள் செப். 20-ஆம் தேதி வெளியாகும். தோ்வு முடிவுகளை அறிவித்தல், மாணவா் சோ்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியாகவே நடத்தப்படும். அக்டோபா் முதல் வாரம் முதல் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும்.

பொதுத்தோ்வு எழுத மாநிலம் முழுவதும் 2,01,834 மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இதில் சனிக்கிழமை நடந்த உயிரியல் பாடத்துக்கான நுழைவுத் தோ்வை 1,62,439 (80.48 %) மாணவா்களும், கணிதப் பாடத் தோ்வை 1,89,522 (93.90%)மாணவா்களும் எழுதினாா்கள்.

ஆக. 29-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பாடத் தோ்வுகள் நடைபெற உள்ளன. வெளி மாநிலம், எல்லைப் பகுதி கன்னடா்களுக்காக ஆக. 30-ஆம் தேதி காலை 11.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை கன்னட மொழி பாடங்களுக்கான நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது, என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.