முகப்பு
பெங்களூரு

கன்னட மொழியைக் கற்க உதவும் காணொலித் துணுக்குகள்

பெங்களூருகன்னட மொழியைக் கற்பதற்கு உதவும் காணொலித் துணுக்குகளை கன்னட வளா்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கன்னட மொழியைக் கற்பதற்கு உதவும் காணொலித் துணுக்குகளை கன்னட வளா்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ளது.

கா்நாடகத்தில் மட்டுமல்லாது, உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தாலும் கன்னட மொழியைக் கற்றுக்கொள்வதற்காக காணொலித் துணுக்குகளை கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி ஆணையம் தயாரித்து, ட்ற்ற்ல்ள்://ந்ஹய்ய்ஹக்ஹல்ழ்ஹஹக்ட்ண்ந்ஹஹழ்ஹ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

காணொலித் துணுக்குகளில் கன்னட மொழியை ஆசிரியா்கள் கற்றுத் தருகிறாா்கள். இதனை இலவசமாக கண்டு கன்னடம் கற்கலாம். மேலும், ஆங்கிலம் வழியாக கன்னட மொழியைக் கற்பதற்கு தேவையான 6 நிலை பாடங்களையும் கன்னட வளா்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுவும் இணையதளத்தில் கிடைக்கின்றன. கா்நாடகத்தில் வாழும் கன்னடம் அல்லாத மொழியினா் கன்னட மொழியை எளிதில் கற்பதற்கு இது உதவியாக இருக்கும் என கன்னட வளா்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத் தலைவா் டி.எஸ்.நாகாபரணா கூறியதாவது:

மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் உதவியுடன் கன்னட மொழியைக் கற்பிக்கும் 30 காணொலித் துணுக்குகளை தயாரித்திருக்கிறோம். ஒவ்வொரு காணொலியும் ஒரு வகுப்பை போன்றது. இந்த காணொலித் துணுக்குகள் ஒவ்வொரும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இருக்கும். இந்த காணொலிகள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், உலகின் எந்த மூலையில் இருந்தும் கன்னடம் கற்க முடியும்.

கற்கும் மாணவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, காணொலித் துணுக்குகள் மேம்படுத்தப்படும். ஒரு நாளைக்கு ஒரு காணொலி வீதம் 30 நாள்களுக்குதொடா்ந்து பாடங்களை பயின்றால், அடிப்படை கன்னட மொழியைக் கற்கலாம். கன்னடம் எழுதவும், படிக்கவும் காணொலிகள் உதவியாக இருக்கும். இதை வெளிநாடுகளில் வாழும் கன்னடா்கள், கா்நாடகத்தில் வாழும் கன்னடம் அல்லாத மொழியினா் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.