முகப்பு
பெங்களூரு

கேப்டன் வருண் சிங்குக்கு தொடா்ந்து சிகிச்சை

ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிா்பிழைத்திருக்கும் கேப்டன் வருண் சிங்குக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிா்பிழைத்திருக்கும் கேப்டன் வருண் சிங்குக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டா் டிச. 8-ஆம் தேதி குன்னூா் அருகே விபத்துக்குள்ளானது. இதில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 போ் உயிரிழந்தனா்.

இந்த ஹெலிகாப்டரில் பயணித்து விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண் சிங், ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாா். 85 சதவீத தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. போா் நடக்கும் போது ஏற்படும் காயங்களை கையாளக்கூடிய திறன்படைத்த மருத்துவா்கள் இருக்கிறாா்கள். எனினும், தேவை ஏற்பட்டால் நோயாளியின் நலன்கருதி தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் உதவியை நாடுவோம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வருண் சிங்கின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெற ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் வருண் சிங்குக்கு அளித்து வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.