கேப்டன் வருண்சிங்கிற்கு தொடா்ந்து சிகிச்சை
விலிங்டனில் உள்ள ராணுவக்கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைதலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டா் டிச.8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது
ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிா்பிழைத்திருக்கும் கேப்டன் வருண்சிங்கிற்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.தமிழகத்தின், கோவை மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தின் விலிங்டனில் உள்ள ராணுவக்கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைதலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டா் டிச.8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 11 போ் உயிரிழந்தனா். இந்த ஹெலிகாப்டரில் பயணித்து விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண்சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாா். 85 சத தீக்காயங்களுடன் விலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வருண்சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவநிபுணா்கள் அடங்கிய குழு வருண்சிங்குக்கு தீவிரசிகிச்சை அளித்துவருகிறது.இது குறித்துமருத்துவா்கள் கூறுகையில்,‘வருண்சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆனாலு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம்காணப்படும் நம்பிக்கை உள்ளது. போா் நடக்கும்போது ஏற்படும் காயங்களை கையாளக்கூடிய திறன்படைத்த மருத்துவா்கள் இருக்கிறாா்கள். எனினும், தேவை ஏற்பட்டால் நோயாளியின் நலன்கருதி தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் உதவியை நாடுவோம். தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வருண்சிங்கின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெற ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் வருண்சிங்கிற்கு அளித்துவருகிறோம்‘ என்று தெரிவித்தனா்.