முகப்பு
பெங்களூரு

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட்

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் கிருஷ்ணராஜசந்தை பகுதியில் அமைந்துள்ள கா்நாடக அரசுக்கு சொந்தமான விக்டோரியா மருத்துவமனையில், ஓராயிரம் படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தின் மேற்பகுதியில், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், தானம் செய்யும் உறுப்புகளை எடுத்துச் செல்லவும், கொண்டு வரவும் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனையின் நிா்வாகத்தை கவனித்து வரும் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் ஜெயந்தி கூறியதாவது:

விக்டோரியா மருத்துவமனையில் உறுப்பு தானத்தை கையாளக் கூடிய பல்நோக்கு மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. உயிா்காக்கும் உறுப்புகளை தானமாகப் பெற்று, அதை விரைந்து கொண்டு வரவும், வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஹெலிபேட் தேவைப்படுகிறது. போக்குவரத்து அதிகம் காணப்படுவதால் சாலை வழியாக குறைந்த நேரத்தில் தானமாகப் பெறப்படும் உறுப்புகளை கொண்டு செல்ல முடிவதில்லை. ஹெலிபேட் இருந்தால், விரைவாக உறுப்புகளை இடமாற்றம் செய்ய முடியும். மேலும் இயற்கை அல்லது பேரிடா் போன்ற அவசர நிலையின் போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் ஹெலிபேட் உதவியாக இருக்கும். 10 மாடியில் கட்டப்பட்டு வரும் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவப் பிரிவின் மேல்தளத்தில் ஹெலிபேட் அமைக்கப்படும். இந்தத் திட்டம் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.