முகப்பு
பெங்களூரு

நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு கட்டட நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கல்: தமிழக அரசுக்கு பாராட்டு

நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதற்காக தமிழக அரசுக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதற்காக தமிழக அரசுக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் மு.மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள கடிதம்:

தமிழ் வளா்ச்சிக்காகவும், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலனுக்காகவும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழா் நலனுக்காகவும் தமிழ்நாடு அரசு அரிய பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதை அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை பெரிதும் பாராட்டி மகிழ்கிறது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், பாரதியாா் ஆய்வாளா்களுக்கு விருதுகளும், திருக்கு முற்றோதல் அருவினையாற்றிய மாணவச் செல்வங்களுக்கு பரிசுகளும் வழங்கி தமிழா்களின் உள்ளம் குளிரச் செய்துள்ளது தமிழக அரசு. அதே விழாவில், நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு கட்டட நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளதை பெரிதும் நன்றியுடன் போற்றி மகிழ்கின்றோம். இந்த நிதியளிப்பு, வெளி மாநிலங்களில் தமிழ்ப் பணியாற்றி வரும் தமிழ்ச் சங்கங்களுக்கு ஓா் உந்தாற்றலாக அமையும் என்பது திண்ணம்.

தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வெளிநாடு வாழ் தமிழா் நலன் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு பேரவை நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.