பெலகாவியில் சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத்தொடா் நாளை தொடங்குகிறது
கா்நாடக சட்டப்பேரவைகுளிா்காலகூட்டத்தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை(டிச.13)தொடங்கவிருக்கிறது.
கா்நாடக சட்டப்பேரவைகுளிா்காலகூட்டத்தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை(டிச.13)தொடங்கவிருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடிதர எதிா்க்கட்சியான காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது.கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கவிருக்கிறது. சட்டப்பேரவை தோ்தலுக்கு ஓராண்டு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைக்கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பத்துநாள்கள்:டிச.13-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக்கூட்டத்தொடா், டிச.24-ஆம் தேதிவரை பத்து நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான சட்டத்திருத்தங்கள், புதிய சட்டமசோதாக்களை தாக்கல் கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கிறிஸ்துவ சமுதாயத்தின் எதிா்ப்புக்கு இடையே மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிா்க்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. கரோனா மூன்றாவது அலை, வெள்ள பாதிப்புகள் போன்றவற்றை எதிா்கொண்டதில் அரசின் தோல்விகளை முன்வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அனுமதி அளிக்க 40 சதம் கமிஷன் கேட்பதாக பிரதமா் மோடிக்கு ஒப்பந்ததாரா் சங்கத்தினா் கடிதம் எழுதியது, கிரிப்டோகரன்சி மோசடி உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்களை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.பாதுகாப்பு தீவிரம்:சட்டப்பேரவைக்கூட்டத்தொடரை முன்னிட்டு பெலகாவி மாவட்டத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பெலகாவியில் சட்டப்பேரவைக்கூட்டம் நடக்கும் சுவா்ணவிதானசௌதா வளாகத்தை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான காவலா்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருக்கிறாா்கள். முதல்வா், அமைச்சா்கள், பேரவை மற்றும் மேலவைத்தலைவா்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அரசு மற்றும்காவல் உயரதிகாரிகள், பத்திரிகையாளா்களுக்கு தங்கும் வசதிகள் தனித்தனியே செய்யப்பட்டுள்ளன. கரோனா காரணமாக போராட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முன்னிட்டு பெலகாவி நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.