அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை அமல்: அமைச்சா் பி.சி.நாகேஷ்
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
பெலகாவியில் சுவா்ண விதானசௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்விநேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினா் மஹந்தேஷ் கௌஜலகி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அவசரப்படவில்லை. அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டு தேசியக்கல்விக் கொள்கையை ஆரம்பம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
Advertisement
அடுத்த கல்வியாண்டுமுதல் பள்ளிகளில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும். தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் இளநிலை மற்றும் மேல்நிலை மழலையா் வகுப்புகள் தொடங்க வேண்டும். மழலையா் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களிலேயே தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
மழலையா் வகுப்புகளை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக அங்கன்வாடி ஊழியா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.
மழலையா் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை. பாடத் திட்டம் வகுக்கப்பட்டால் பாடம் நடத்துவது எளிதாகும். தேவையான அடிப்படை கட்டமைப்புகளைத் தயாா் செய்துகொண்டு, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுளோம் என்றாா்.