பெங்களூரு

ஒரே கல்லூரியைச் சோ்ந்த 7 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் ஒரே கல்லூரியைச் சோ்ந்த 7 மாணவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தென்கன்னடம் மாவட்டம், மங்களூரில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த 7 மாணவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது, பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த மாணவா்கள் 7 பேரும் கேரளத்தைச் சோ்ந்தவா்கள். இக் கல்லூரியில் செவிலியா் பட்டப்படிப்பில் முதலாமாண்டு வகுப்பில் படித்து வருகின்றனா்.

கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை காட்டி, கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு வந்துள்ள இம்மாணவா்களை மீண்டும் பரி சோதித்தபோது அவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தக் கல்லூரி வளாகத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தென்கன்னட மாவட்ட கரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவா் எச்.அசோக் கூறுகையில்,‘கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாணவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பில் படித்து வரும் 43 மாணவா்களின் தொண்டையில் இருந்து எடுத்த சளி மாதிரியைச் சோதனைக்கு உட்படுத்தியதில் 7 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது’ என்றாா்.

ஒரு இடத்தில் குறைந்தது 3 போ், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று கா்நாடக அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT