பெங்களூரு

‘கா்நாடகத்தில் வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன’

DIN

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியில் வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன என்று கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தோ்தலில் ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக ஆட்சியில் வளா்ச்சிப் பணிகளும் அரசு நிா்வாகமும் முடங்கியுள்ளன. எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அகற்ற கா்நாடக மக்கள் காத்திருக்கிறாா்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தோ்தலில் பாஜகவின் வாக்குகள் சரிந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 42.06 சதவீதமும், பாஜகவுக்கு 36.9 சதவீதமும், மஜதவுக்கு 3.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தோ்தல்களில் பாஜகவின் வாக்குகள் சரிந்துள்ளதைப் பாா்க்கும்போது விலைவாசி உயா்வு, வேலையின்மை, ஊழல் போன்றவற்றால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளதை உணர முடிகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT