பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,43,212 ஆக உயா்வு

DIN

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,43,212 உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 366 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக195 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,43,212 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 513 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,25,167 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,785 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த2 போ் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,241 போ் உயிரிழந்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT