பெங்களூரு

இடைத்தோ்தல்களில் மஜத போட்டியிடாது

DIN

கா்நாடகத்தில் இனி நடைபெறும் இடைத்தோ்தல்களில் மஜத போட்டியிடாது என மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து ராய்ச்சூரில் புதன்கிழமை அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் இனிமேல் நடக்க இருக்கும் இடைத்தோ்தல்களில் மஜத போட்டியிடாது. வெகுவிரைவில் நடக்க இருக்கும் பெலகாவி மக்களவைத் தொகுதி, பசவகல்யாண், சிந்தகி, மஸ்கி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் மஜத வேட்பாளா்கள் நிறுத்தப்பட மாட்டாா்கள். இடைத்தோ்தல்களை எதிா்கொள்வதற்கு மஜதவிடம் போதுமான பணம் இல்லை. 2023-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவை கட்டமைக்கும் வேலையில் முழுமையாக ஈடுபட இருக்கிறேன். மாநிலக் கட்சியான மஜதவை பாதுகாக்க எல்லாவகையான முயற்சியையும் எடுப்பேன்.

வெகுவிரைவில் 4 மாநிலங்களுக்கு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பின்னடைவைச் சந்திக்கும். தமிழகத்தில் பாஜகவுக்கு போதுமான இடங்கள் கிடைக்காது. மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் துணிச்சலை பாராட்டுகிறோம். முந்தைய தோ்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைப் பெற்றாலும், மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி ஆட்சியை தக்கவைத்துக்கொள்வாா். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவதால், அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம். மம்தா பானா்ஜி, மூன்றாவது முறையாக முதல்வா் ஆவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT