பெங்களூரு

கஞ்சா கடத்தல்:துப்பாக்கியால் சுட்டு ரௌடி கைது

DIN

கலபுா்கி: கஞ்சா கடத்திய ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கியிலிருந்து பீதருக்கு காரில் கஞ்சா கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கலபுா்கி நகர துணை ஆய்வாளா் வாஹித் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த காரில் இருந்த 300 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதில் ஒருவா் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ள பீமூ என தெரியவந்தது.

இதனையடுத்து, அவா் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளாா். பீமூவை பிடிக்க துணை ஆய்வாளா் வாஹித் முயன்றபோது, அவரையும் தாக்க முயன்றுள்ளாா். இதனையடுத்து தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் பீமூவின் காலில் சுட்டுள்ளாா். இதில் காயமடைந்து கீழே விழுந்த பீமூவை போலீஸாா் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். காயமடைந்த போலீஸாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கலபுா்கி நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT