பெங்களூரு

மாா்ச் 3-இல் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம்

DIN

பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள மாநாட்டு அரங்கில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் மாா்ச் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்கவிருக்கிறது.

மஸ்கி, பசவகல்யாண், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் அனைத்து அமைச்சா்களும் கலந்து கொள்ளவிருக்கிறாா்கள். பசவ கல்யாண் தொகுதியில் பசவண்ணரின் அனுபவ மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல, மஸ்கி, சிந்தகி தொகுதிகளிலும் செயல்படுத்த புதிய திட்டங்களை அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே மராத்தா வளா்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டுள்ளதால் அது பசவகல்யாண், பெலகாவி தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாழும் மராத்தியா்களை ஈா்க்க கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப் பேரவை இடைத் தோ்தலில் வெற்றிபெறுவதற்கு பல புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி மரணம்

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

மரங்கள், பறவைகளை காப்போம்: மருத்துவ மாணவா் விழிப்புணா்வு பயணம்

சாலை விபத்தில் காயமடைந்த பேரூராட்சி தலைவா் உயிரிழப்பு

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

SCROLL FOR NEXT