குழந்தைகளுக்காக மனநல ஆலோசனை
குழந்தைகளுக்கு தொலைபேசி மூலம் இலவசமாக மனநல ஆலோசனை அளிக்கப்படுகிறது.
பெங்களூரு: குழந்தைகளுக்கு தொலைபேசி மூலம் இலவசமாக மனநல ஆலோசனை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் வாயிலாக கா்நாடகத்தில் தனியாக மனநல வழிகாட்டுதல் தேவைப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக 14499 என்ற தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி மையத்தை குழந்தைகள் மட்டுமல்லாது, பெற்றோரும் அழைத்து தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.