முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 12 மார்ச், 2026 at 11:41 AM
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.
பகிர்:

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

பூக்கி

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவான புதிய படம் ’பூக்கி’. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷான் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

‘பூக்கி’ திரைப்படம் நாளை(மார்ச் 13) ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.

யோகிடா

கெளதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் யோகிடா.

அதிரடி பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆஹா ஓடிடியில் நாளை பார்க்கலாம்.

ஃப்ரைடே

ரெளடிக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஃப்ரைடே. இந்தப் படத்தில் தீனா, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

ஃபங்கி

கே.வி. அனுதீப் இயக்கத்தில், விஷ்வக் சென் மற்றும் கயாது லோஹர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபங்கி.

ஃபங்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நாளை வெளியாகிறது.

கஃபுள் பிரண்ட்லி

இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படம் கஃபுள் பிரண்ட்லி.

இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நாளை வெளியாகிறது.

மேட் இன் கொரியா

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் மேட் இன் கொரியா. இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

லாக் டவுன்

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நடிகை அனுபமாவின் லாக் டவுன் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பார்த்தா மஹா சையுலகு விங்யாப்தி

ரவி தேஜா நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் திரைப்படம் பார்த்தா மஹா சையுலகு விங்யாப்தி.

இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.

கடந்த வார ஓடிடி(வித் லவ்)

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வித் லவ்.

வித் லவ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணக் கிடைக்கிறது.

காந்தி டாக்ஸ்

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் வசனங்களே இல்லாத சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் திரைப்படம் உருவானது.

இந்தத் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

டியர் ரதி

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் சரவண விக்ரம் நடிப்பில் வெளியான டியர் ரதி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

டியர் ரதி படத்தில் சரவண விக்ரமுடன் ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

க்ராணி

க்ராணி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

இந்தப் படத்தில் நடிகை வடிவுக்கரசி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜாக்கி

பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஜாக்கி.

ஜாக்கி திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. மதுரையில் நடக்கும் கிடா சண்டையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் ஆன் டூட்டி

நிகில் மாலியக்கல் நாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் தெலுங்கு மொழி இணையத் தொடர் விக்ரம் ஆன் டூட்டி.

மேலும் இந்தத் தொடரில் ஆசு ரெட்டி, காயத்ரி சகந்தி, ரகு, ஆர்யா, சமீர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் காணலாம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டு வெளியான ஓம் சாந்தி சாந்தி சாந்தி திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ஏ.ஆர்.சஜீவ் இயக்கிய இந்தப் படத்தில் தருண் பாஸ்கர் மற்றும் ஈஷா ரெப்பா பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

summary

Lots of films releasing on OTT this week!

முழு கட்டுரையைப் படிக்க →